மாத்தறை, பண்டாரவத்தை பிரதேசத்தில் காணி தகராறு காரணமாக பெண் ஒருவரும் அவரது குழந்தையும் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது மனைவியினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த பெண் தற்போது கம்புருப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தலை மற்றும் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மேலதிக சிகிச்சைக்காக இன்று மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்படவுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்தவர்கள் அதே பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய தாய் மற்றும் அவரது 14 வயதுடைய மகன் என தெரியவந்துள்ளது.

குறித்த பெண் காணி ஒன்றில் கழிப்பறைக்காக குழி தோண்டிய சம்பவம் தொடர்பில் வாய் தகராறு நீண்ட தூரம் சென்றமையினால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ள போதிலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் முறைப்பாடுகளை பொலிஸார் ஏற்கவில்லை என காயமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.